டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன்முகநூல்
இந்தியா
5 ஆண்டுகளில் 5 லட்சம் வேலைவாய்ப்புகள்... டாடா குழுமம் போட்ட திட்டம்!
மின்வாகனம், பேட்டரி, செமிகண்டக்டர், சோலார் உள்ளிட்ட தயாரிப்புகளில் டாடா குழுமம் தற்போது கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.
டாடா குழுமம் அடுத்த 5 ஆண்டுகளில் உற்பத்தித் துறையில் 5 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க திட்டமிட்டிருப்பதாக டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
மின்வாகனம், பேட்டரி, செமிகண்டக்டர், சோலார் உள்ளிட்ட தயாரிப்புகளில் டாடா குழுமம் தற்போது கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. இந்தத் துறைகளில் டாடா குழுமம் பெரும் முதலீடுகள் மேற்கொள்ள இருப்பதாகவும் அதன் வழியே உற்பத்தித் துறை சார்ந்த 5 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க திட்டமிட்டு இருப்பதாகவும் என். சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேசம்: ரயில் சக்கரங்களுக்கு நடுவே 250 கி.மீ தூரம் பயணம்.. காரணத்தால் அதிர்ந்த ஊழியர்கள்!
இதுதவிர்த்து, தொழில்நுட்ப சேவைகள், ரீடெயில் உள்ளிட்ட சேவைத் துறையிலும் பெரும் எண்ணிக்கையில் வேலைவாய்ப்புகளை உருவாக்க டாடா குழுமம் திட்டமிட்டு இருப்பதாக சந்திரசேகரன் குறிப்பிட்டு ள்ளார்.