'அன்பே என்றும் தீர்வாகும்'.. ஒன்றுதிரளும் தமிழகம்; தொடர்ந்து அனுப்பப்படும் நிவாரணப் பொருட்கள்!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்காக, பல்வேறு மாவட்டங்களில் இருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டன.
நிவாரணப் பொருட்கள்
நிவாரணப் பொருட்கள்pt web

தஞ்சை மாவட்டத்தில், பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து 50 லட்சம் ரூபாய் நிதி திரட்டப்பட்டு, சென்னைக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன. தண்ணீர், பிஸ்கெட், கோதுமை, மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களும், பாய், பெட்ஷீட், தலையணை, நாப்கின் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

தூத்துக்குடி மாவட்டத்தில், மக்களிடம் இருந்து திரட்டப்பட்ட நான்கு லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. போர்வைகள், 15 ஆயிரம் லிட்டர் தண்ணீர் பாட்டில்கள், 1,380 கிலோ அரிசி, 40 கிலோ பருப்பு ஆகிய நிவாரணப் பொருட்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து லாரிகள் மூலம் அனுப்பிவைக்கப்பட்டன. இதை, ஆட்சியர் லட்சுமிபதி கொடியசைத்து அனுப்பிவைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில், ’அன்பால் அறம் செய்வோம்’ என்ற தொண்டு நிறுவனம் சார்பில், ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டன. 5 ஆயிரம் தண்ணீர் பாட்டில்கள், 5 ஆயிரம் பிஸ்கெட் பாக்கெட்டுகள், ஆயிரம் ரொட்டி பாக்கெட்டுகள், வாழைப்பழங்கள், பால் பொருட்கள், நாப்கின், உள்ளிட்டவை வந்தவாசி காவல் ஆய்வாளர் விசுவநாதன் முன்னிலையில் லாரிகள் மூலம் அனுப்பிவைக்கப்பட்டன.

திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் திருவெறும்பூர், பனையகுறிச்சி ஊராட்சிகள் சார்பில் பிஸ்கெட், ரொட்டி, ரஸ்க், தண்ணீர் பாட்டில் என 35 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் வழங்கப்பட்டன. தங்கள் சொந்த நிதியில் இருந்து வாங்கப்பட்ட இந்தப் பொருட்களை, ஊராட்சித் தலைவர்கள் ரேணுகாதேவி, பார்த்தசாரதி ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்தனர். இந்தப் பொருட்களை, சென்னைக்கு அனுப்பிவைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com