“பாஜகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தை இன்று மீண்டும் தொடரும்” - ஓபிஎஸ்

பாஜகவுடன் நாளை மீண்டும் பேச்சு வார்த்தை - தொகுதி பங்கீட்டில் எந்தவித பிரச்னையும் இல்லாமல் சமூகமாக, நடைபெற வேண்டும் என்பதில் நாங்கள் அனைவருமே முழு மனதோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம் என்று ஓபிஎஸ் தெரிவித்தார்.
OPS | OPanneerselvam
OPS | OPanneerselvampt desk

செய்தியாளர்: சந்தானகுமார்

சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் பாஜக - ஓபிஎஸ் அணி இடையே கூட்டணி பேச்சு வார்த்தை நேற்று நள்ளிரவு நடைபெற்றது. சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டணி பேச்சு வார்த்தையில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர்கள் கிஷன் ரெட்டி, வி.கே.சிங், எல்.முருகன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாஜக மேலிட பொறுப்பாளர் அருண் மேனன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

OPS
OPSpt desk

ஓபிஎஸ் அணி சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி பிரபாகர், கு.ப.கிருஷ்ணன், புகழேந்தி ஆகியோர் பங்கேற்றனர்

OPS | OPanneerselvam
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்|ஆஸ்கர் விருது வழங்கும் விழா To இந்தோனேசியாவில் கனமழை பாதிப்பு

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓபிஎஸ்...

“பாஜகவுடன் நடைபெற்ற கூட்டணி பேச்சுவார்த்தை மிக சுமுகமாக நடைபெற்றது. எங்களுக்கு விருப்பம் உள்ள தொகுதிகள் குறித்து கேட்டறிந்தனர், அனைத்து விவரங்களையும் நாங்கள் தெளிவாக சொன்னோம். பாஜகவின் தலைமையில் இருந்து வந்திருக்கக் கூடிய தலைவர்கள் எங்கள் கோரிக்கைகளை பிரச்னைகளை தெளிவாக கேட்டறிந்து கொண்டனர், எங்கள் சார்பாக கூட்டணியில் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடப் போகிறோம் என்பதை சொல்லியுள்ளேன். மற்ற கூட்டணி கட்சிகளுடன் கலந்து பேசிய பின்னர் சொல்வதாக தெரிவித்தனர்,

PM Modi
PM Modipt desk

முதன்முதலில் எங்கள் கட்சியுடன்தான் பேசியுள்ளார்கள், மற்ற கட்சிகளிடம் கேட்ட பின்னர், சுமூகமான முறையில் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில், முடிவுகள் எட்டப்படும். தொகுதி பங்கீட்டில் எந்தவித பிரச்னையும் இல்லாமல் சுமூகமாக நடைபெற வேண்டும் என்பதில் நாங்கள் அனைவருமே முழு மனதோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம். நாளை (இன்று) மீண்டும் பேச்சு வார்த்தையில் ஈடுபட உள்ளோம்” என தெரிவித்தார்.

மேலும் டி.டி.வி தினகரனையும் அழைத்து கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவித்தனர் என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com