இன்றைய காலை தலைப்புச் செய்திகள்|ஆஸ்கர் விருது வழங்கும் விழா To இந்தோனேசியாவில் கனமழை பாதிப்பு

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது ஆஸ்கர் விருது வழங்கும் விழா முதல் இந்தோனேசியாவில் கனமழை பாதிப்பு வரை
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்
இன்றைய காலை தலைப்புச் செய்திகள்முகநூல்

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்

 • அமெரிக்காவில் கோலாகலமாக தொடங்கியது ஆஸ்கர் விருது வழங்கும் விழா.இதில், சிறந்த துணை நடிகைக்கான விருதை வென்றார் டாவின் ஜாய் ரான்டால்ஃப்.

 • பாஜக மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இடையே முதற்கட்ட கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றதாக ஓபிஎஸ் பேட்டி.

 • வேட்பாளர்களை தேர்வு செய்ய திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. திமுக சார்பில் தூத்துக்குடியில் களம் இறங்குகிறாரா கனிமொழி?.

 • சென்னையில் இன்று தமிழக பாஜக தேர்தல் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் ஓரிரு நாட்களில் வேட்பாளர் பட்டியலை வெளியிட திட்டமிட்டுள்ளது.

 • 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வென்றால்தான் மத்தியில் மாற்றம் நிகழும் எனவும், 5ஆவது முறையாக வெற்றிக்கூட்டணி தொடர்வதாகவும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 • போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநர் ரவியிடம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் வலியுறுத்தியுள்ளார்.

 • போதைப் பொருள் பழக்கம் எதிர்கால தலைமுறையை அழித்துவிடும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை தெரிவித்துள்ளார்.

 • பாஜகவும் அதிமுகவும் இணைந்து திமுகவுக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள் எனவும், குட்கா விற்பனையாளர்களுடன் தொடர்பில் இருந்தது அதிமுக அமைச்சர்கள்தான் எனவும் அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

 • போதைப்பொருள் விவகாரத்தில் முதலமைச்சர் மீதோ, திமுக மீதோ அவதூறு பரப்பினால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக எம்பியும், வழக்கறிஞருமான வில்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 • திமுக அரசு குறித்து விமர்சித்தால் பயமுறுத்துவதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார். இருப்பினும், போதைப் பொருளை ஒழிக்க பாஜகவின் குரல் ஒலிக்கும் எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.

 • புதுக்கோட்டை அருகே இறால் பண்ணையில் 71 கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இலங்கைக்கு கடத்த முயன்றது அம்பலமாகியுள்ளது.

 • சென்னை பாரிமுனையில் தடை செய்யப்பட்ட 300 இ-சிகரெட் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், 6 பேரை கைது செய்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

 • போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாஃபர் சாதிக் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், சர்வதேச அளவில் போதைப் பொருட்களை கடத்தி சட்டவிரோத பணபரிவர்த்தனை செய்ததாக குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளனர்.

 • விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இரண்டு நாட்களில் 50 லட்சம் பேர் இணைந்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், பல்வேறு மாவட்டங்களில் உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

 • சர்வர் கோளாறு காரணமாக முனைவர் நுழைவுத்தேர்வு எழுத முடியாதவர்களுக்கு மறுதேர்வு என புதிய தலைமுறை செய்தி வெளியிட்ட நிலையில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

 • நெல்லையில் பள்ளி வாசல் கட்டட திறப்பு விழாவில் மாற்று மதத்தினர் பங்கேற்றனர். பழங்கள், அரிசி, மளிகைப் பொருட்களுடன் சீர்வரிசையும் அளிக்கப்பட்டது.

 • மேற்கு வங்கத்தில் 42 தொகுதிகளிலும் திரிணமூல் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடவுள்ளது. இதில், மஹூவா மொய்த்ரா, கிரிக்கெட் வீரர்கள் யூசுப் பதான், கீர்த்தி ஆசாத்துக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

 • திரிணமூல் காங்கிரஸ் அவசரமாக வேட்பாளர் பட்டியலை வெளியிட என்ன காரணம்? என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

 • தேர்தல் ஆணையர் அருண் கோயலின் திடீர் ராஜினாமாவின் பின்னணி குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.ஆனால், தேர்தல் ஆணையர் பதவி விலகுவது புதிதல்ல என பாஜக விளக்கமளித்துள்ளது.

 • புதிதாக இரண்டு தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 • டெல்லியில் 40 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த இளைஞர் உயிரிழந்தார். 12 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் உடலை வெளியே எடுத்த மீட்புப் படையினர்.

 • இந்தோனேசியாவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில், 19 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும், 700-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 • டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்டுக்கு உடற்தகுதி சான்று அளிக்கப்பட்ட நிலையில், ஐபிஎல் தொடரில் களம் இறங்குவார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 • 3 விதமான கிரிக்கெட் தரவரிசைகளிலும் இந்திய அணி முதலிடம் பிடித்துள்ளது.மேலும், டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலிலும் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது.

 • பாரிஸ் ஒலிம்பிக்கிற்கான வாய்ப்பை இழந்தனர் மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா, ரவி தாஹியா. தகுதிப் போட்டியில் தோல்வியடைந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com