\
opposition to cm vijay speech dmk MLAs create a ruckus in the assembly
cm vijayPT Web

ஸ்டாலின் ஆட்சியை விமர்சித்த முதல்வர் விஜய்.. திமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு!

திமுக குறித்து முதல்வர் விஜய் கடுமையாக விமர்சித்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டதுடன் வெளிநடப்பு செய்தனர்.
Published on

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வென்று, பிற கட்சிகளுடன் ஆதரவுடன் ஆட்சியமைத்திருக்கும் நிலையில், முழுமையான முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் கடந்த 18ஆம் தேதி தொடங்கியது. இந்த நிலையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம், நேற்று சட்டசபையில் மீண்டும் தொடங்கியது. அப்போது எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு பிரச்னைகள் குறித்து பேசினார். அதற்கு, பல்வேறு அமைச்சர்கள் பதிலளித்தனர். தொடர்ந்து இதற்கு முதல்வர் விஜய் பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்த நிலையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தொடர்பாக முதல்வர் விஜய் உரையாற்றினார். அப்போது திமுக குறித்து கடுமையாக விமர்சித்தார். குறிப்பாக, டாஸ்மாக்கில் கட்சி நிதி என்ற பெயரில் வசூலித்தனர் என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். அதற்குப் பேரவைத் தலைவர், முதல்வர் தனது உரையை முடித்த பிறகு எதிர்க்கட்சித் தலைவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றார். எனினும், திமுகவினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இறுதியாக, மேலும் திமுக அரசை முதல்வர் விமர்சித்த நிலையில் திமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com