\
Opposition Leaders criticised Tamil Nadu Vijay Govt Agriculture Budget 2026
ஆர்.வினோத்புதிய தலைமுறை

”ஏமாற்றமே மிஞ்சியது..” - தவெக அரசின் வேளாண் பட்ஜெட் குறித்து விமர்சனம்

அமைச்சர் ஆர்.வினோத் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது, தமிழக விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்திற்காக ரூ.7,432 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அவர் தெரிவித்தார்.
Published on: 

2026-27ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை, நிதியமைச்சர் மரிய வில்சன் நேற்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்த நிலையில், இன்று அமைச்சர் ஆர்.வினோத் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது, தமிழக விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்திற்காக ரூ.7,432 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அவர் தெரிவித்தார். மேலும், பல அறிவிப்புகளையும் வெளியிட்டார். இந்த நிலையில், தவெக அரசின் வேளாண் பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சியினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

cm stalin
cm stalinx page

மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர்

”வறட்சி பற்றிப் பேசாமல், புகழ்ச்சிப் பாடி முதலமைச்சரின் உச்சிகுளிர பாராட்டு மழை பொழியப் பயன்பட்டதுதான் வேளாண் பட்ஜெட்; திராவிட மாடல் அரசின் திட்டங்களின் மேல் ’வெற்றி’ என்ற லேபிளை ஒட்டினால் வேலை முடிந்தது என்று இந்த அரசு நினைக்கிறதா?”

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி

”தவெகவின் வேளாண் பட்ஜெட் மீது விவசாயிகள் பெரிய எதிர்பார்ப்புடன் இருந்தனர்; ஏமாற்றமே மிஞ்சியது. கடந்தகால ஆட்சியில் என்ன நிலை இருந்ததோ, இதே நிலைதான் நெல் கொள்முதல் நிலையங்களில் இருக்கிறது. விவசாயிகளை ஏமாற்றும் பட்ஜெட் இது; வேளாண் பட்ஜெட் எனும் நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர்”.

உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர்

”இதை வேளாண் பட்ஜெட் என்று சொல்வதைவிட, முழுக்கமுழுக்க முதலமைச்சருக்கு ஜால்ரா அடித்துள்ளார் வேளாண் அமைச்சர் வினோத். இந்த பட்ஜெட்டில் புதிதாக என்று சொன்னால் எதுவுமே இல்லை. பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டனர்”.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்PT

பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக பொதுச் செயலாளர்

”விவசாயிகள் எதிர்பார்த்த முக்கியத் திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் இல்லை. மாற்றம் தருவோம் என்று சொன்னவர்கள் எந்த மாற்றமும் தரவில்லை. பல ஆண்டுகளக அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு பெயர் மாற்றம் செய்து திட்டங்களை அறிவித்துள்ளனர். கருவேல மரங்களை நீக்கை அதனை விளைநிலங்களாக மாற்றி மக்களுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுக்கலாம். இதுபோன்ற புதிய திட்டங்களை எதிர்பார்த்தோம்”.