தமிழ்நாடு
’’அம்மாவின் ஆட்சியமைக்க வீர சபதம் ஏற்போம்’’ - முதலமைச்சர் பழனிசாமி
’’அம்மாவின் ஆட்சியமைக்க வீர சபதம் ஏற்போம்’’ - முதலமைச்சர் பழனிசாமி
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையேற்று திறந்து வைத்தார். இவ்விழாவில் அமைச்சர் பெருமக்கள் அதிமுக கட்சியின் மூத்த நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என பெரும் திரளானோர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் பேசிய முதல்வர் பழனிசாமி, ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது செய்த திட்டங்களை எடுத்துரைத்தார். தொடர்ந்து பேசிய அவர் அம்மா அவர்களின் ஆட்சியை அமைப்போம் அதுதான் நமது லட்சியம் அம்மாவின் நினைவிடத்தில் நாம் அத்தனை பேரும் நன்றி செலுத்துவதற்கு வீர சபதம் ஏற்போம் என்று உரையாற்றினார்