கட்டுக்குள் வருமா வெங்காயம் விலை ?

கட்டுக்குள் வருமா வெங்காயம் விலை ?
கட்டுக்குள் வருமா வெங்காயம் விலை ?

கடந்த சில வாரங்களாக உச்சத்தில் இருந்த வெங்காயத்தின் விலை கிலோவுக்கு சுமார் 10 ரூபாய் வரை குறைந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வெங்காயத்தின் விலை ‌உச்சத்தில் இருந்ததால் பொதுமக்களும், உணவக உரிமையாளர்களும் கலக்கத்தில் இருந்தனர். இந்நிலையில் அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் தற்போது சற்று விலை குறைந்துள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் 140 ரூபாய் வரைக்கும், பெரிய வெங்காயம் 80 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

திருச்சி வெங்காய மண்டியில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் 110 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் 90 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. மதுரை காய்கறி சந்தையில் சின்ன வெங்காயம் 140 ரூபாய்க்கும் பெரிய வெங்காயம் 90 ரூபாய்க்கும், கோவை சந்தையில் சின்ன வெங்காயம் 115 ரூபாய் வரைக்கும், பெரிய வெங்காயம் 94 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com