சென்னை: மதுபோதையில் அணைக்காமல் போட்ட சிகரெட் துண்டால் பறிபோன உயிர்!

வேளச்சேரியில் மதுபோதையில் சிகரெட் துண்டை அணைக்காமல் படுக்கையில் போட்டதால் மெத்தை தீப்பற்றி படுக்கையில் இருந்தவர் பரிதாபமாக உயிரிழப்பு.
வேளச்சேரி
வேளச்சேரிமுகநூல்

வேளச்சேரியில் மதுபோதையில் சிகரெட் துண்டை அணைக்காமல் படுக்கையில் போட்டதால் மெத்தை தீப்பற்றி படுக்கையில் இருந்தவர் பரிதாபமாக உயிரிழப்பு.

சென்னை வேளச்சேரி, ராஜலட்சுமி நகரில் ஏழுமலைவாசன் என்பவரிடம் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருபவர் கோவிந்தன்(55). இவர் ஏழுமலை வாசன் வீட்டின் இரண்டாவது தளத்தில் தகர கொட்டகை அமைத்து ஐந்து பேருடன் தங்கியிருந்தார்.

வேளச்சேரி
புதுக்கோட்டை: தண்ணீர் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை – தந்தையே செய்த கொடூர செயல்!

பொங்கல் பண்டிகைக்காக 4 பேர் சொந்த ஊர் சென்ற நிலையில் இவர் மட்டும் தனியாக காலை முதல் மது அருந்திவிட்டு சிகரெட் புகைத்துக் கொண்டு படுத்துள்ளார். மதுபோதையில் சிகரெட் துண்டை அணைக்காமல் போட்டதால் மெத்தை தீப்பிடித்து படுக்கை எரிந்து தீயில் கருகி சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். வீட்டின் உரிமையாளரின் மகன் தீப்பற்றி எரிவதை பார்த்து விட்டு வேளச்சேரி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

தகவலறிந்து வந்த வேளச்சேரி காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக இராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றன.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com