புதுக்கோட்டை: தண்ணீர் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை – தந்தையே செய்த கொடூர செயல்!

புதுக்கோட்டை மாவட்டம் கே.புதுப்பட்டி அருகே கரையப்பட்டியில் பிறந்த 35 நாட்களே ஆன குழந்தையை கொலை செய்ததாக குழந்தையின் தந்தை மோகன் மற்றும் அவருடன் சேர்ந்து வாழும் தாய் கிருத்திகா ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
Mohan
Mohanpt desk

செய்தியாளர்: முத்துப்பழம்பதி

கரையப்பட்டியை சேர்ந்த மோகன் என்பவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியை விவாகரத்து செய்யாத நிலையில், கடந்த ஒரு வருட காலமாக வைரிவயல் கிராமத்தை சேர்ந்த செண்பகவள்ளி என்ற கிருத்திகாவுடன் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் அவர்களுக்கு கடந்த 37 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

Police station
Police stationpt desk

இந்நிலையில், நேற்று முன் தினம் (12ஆம் தேதி) மாலை அவர்களது வீட்டு மாடியில் உள்ள சின்டெக்ஸ் டேங்கில் கழுத்தில் காயங்களுடன் குழந்தை சடலமாக கிடந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து கே.புதுப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

விசாரணையில், முதல் மனைவியை முறைப்படி விவாகரத்து செய்யாமல் மற்றொரு பெண்ணுடன் குழந்தை பிறந்திருப்பது குறித்து நீதிமன்றத்தில் பிரச்னை வரலாம் என்பதால் மோகனே குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இதற்கு கிருத்திகாவும் உடந்தையாக இருந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து இருவரையும் போலீ:சார் கைது செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com