\
விபத்து நடந்த இடம்
விபத்து நடந்த இடம்புதிய தலைமுறை

தென்காசி டூ கோவை: சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளான ஆம்னி பேருந்து - இருவர் உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் வழியாக கோவை நோக்கிச் சென்ற ஆம்னி பேருந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். 7 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், 12 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Published on

செய்தியாளர்: கருப்பஞானியார்

தென்காசி மாவட்டத்தில் இருந்து 20-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு, தனியார் ஆம்னி பேருந்து ஒன்று கோவைக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் அடுத்த கிருஷ்ணன் கோயில் அருகே பேருந்து சென்ற போது, எதிர்பாராத விதமாக சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர், பேருந்துக்குள் சிக்கி இருந்தவர்களை பொதுமக்கள் உதவியுடன் மீட்டனர்.

Bus accident
Bus accidentpt desk

இந்த விபத்தில் தென்காசி மாவட்டம் இடைகாலை சேர்ந்த கார்த்திக் (20), வால்பாறையைச் சேர்ந்த முத்துச் செல்வி (47) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த தங்கராஜ், பொன் லட்சுமி, மகேஸ்வரி. சித்ரா, காளீஸ்வரி, ஜெயபிரகாஷ், மாரியப்பன் ஆகியோர் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 12 பேர் ஶ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தால் மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விபத்து நடந்த இடம்
திருச்சி: பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நண்பர்களுடன் கிணற்றில் குளித்த கல்லூரி மாணவனுக்கு நேர்ந்த சோகம்

இதையடுத்து சம்பவ இடத்திற்கு நேரில் வந்த விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com