திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வில் பழைய வினாத்தாள்கள் வழங்கப்பட்டதாக புகார்

வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணாக்கருக்கு தேர்வுக்காக பழைய வினாத்தாள்கள் வழங்கப்பட்டதாக சர்ச்சை எழுந்த நிலையில், நேற்று வரை நடைபெற்ற அரியர் தேர்வுகளிலும் பழைய வினாத்தாள்களே வழங்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

பல்கலைக்கழக மாணாக்கருக்கு அண்மையில் வைக்கப்பட்ட மூன்று தேர்வுகளில் பழைய வினாத்தாள்கள் வழங்கப்பட்ட நிலையில், இதுகுறித்து புதிய தலைமுறையில் செய்தி வெளியானது. பல்கலைக்கழக நிர்வாகம் தரப்பில், "வினாத்தாள் தயாரிப்பாளருக்கு புதிய பாடத்திட்டத்தை வழங்காததே வினாத்தாள் குழப்பத்துக்கு காரணம்" என சொல்லப்பட்டது.

Question paper
Question paperpt desk

இந்நிலையில், கடந்த நான்கு நாட்களாக நடத்தப்பட்ட தேர்வுகளிலும் வினாத்தாள் குறித்த குழப்பம் ஏற்பட்டுள்ளது. முதுகலை கணிதம் பயிலும் மாணாக்கருக்கு நடத்தப்பட்ட அரியர் தேர்வுகளில் புதிய வினாத்தாளுக்கு பதிலாக இதற்கு முன்பு நடந்து முடிந்த பருவத் தேர்வின் வினாத்தாள் அப்படியே வழங்கப்பட்டிருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.

தொடர்ந்து நீடித்து வரும் வினாத்தாள் சர்ச்சையால் மாணாக்கரின் கல்வித் தரம் குறித்து ஐயம் எழுந்துள்ளது.

Thiruvalluvar University
பழம்பெரும் பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com