prakash raj
prakash rajpt web

கொடைக்கானலில் நடிகர் பிரகாஷ்ராஜ் ஆக்கிரமிப்பு செய்தாரா? உண்மைஎன்ன?-வருவாய்த்துறை அதிகாரிகள் விளக்கம்

பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ், கொடைக்கானல் அஞ்சு வீடு பகுதியில் எந்த ஆக்கிரமிப்பும் செய்யவில்லை என வருவாய்த்துறையினர் தகவல்... பிரகாஷ் ராஜ் பட்டா நிலத்தின் அருகே செல்லும் பொதுப்பாதையை பொது மக்கள் பயன்படுத்த தடையில்லை எனவும் தகவல்...
Published on

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே வில்பட்டி ஊராட்சிக்குட்பட்ட அஞ்சு வீடு பகுதியில் நடிகர்கள் ப்ரகாஷ் ராஜ் மற்றும் பாபி சிம்ஹா நிலம் வாங்கி, அதில் வீடுகள் கட்டி வருகின்றனர். இதில் பிரகாஷ் ராஜ், அவரது நிலத்திற்கு அருகே செல்லும் பொதுப்பாதையை ஆக்கிரமிப்பதாக அசோகன் என்பவர், பிரதமர் மந்திரி அலுவலகத்திற்கு புகார் மனு அனுப்பினார்.

prakash raj
prakash rajpt desk

அதன் அடிப்படையில் வருவாய்த் துறையினர் அவரது இடத்தை ஆய்வு செய்தனர். மண்டல உதவி அலுவலர் பாண்டியன் தலைமையிலான அதிகாரிகள் குழு செய்த ஆய்வில் பிரகாஷ்ராஜ் பெயரில் 7 ஏக்கர் பட்டா இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

மேலும் அவரது நிலத்திற்கு அருகில் செல்லும் பொதுப்பாதையை அவர் ஆக்கிரமிக்கவில்லை என்றும், அப்பாதையை பொது மக்கள் பயன்படுத்த தடை இல்லை என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் அதே பகுதியில் நடிகர் பாபி சிம்ஹா விதிகளை மீறி 3 மாடி கட்டிடம் கட்டுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில், அவரது கட்டுமானத்தை அளவீடு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். பாபி சிம்ஹா விதிகளை மீறி கட்டடங்களை கட்டியுள்ளாரா என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com