HEADLINES |அன்புமணியின் எச்சரிக்கை முதல் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு வரை!
இன்றைய காலை தலைப்புச் செய்தியானது, 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு முதல் அன்புமணியின் எச்சரிக்கை வரை விவரிக்கிறது.
வரவிருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, போட்டியிடும் ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனி தேர்தல் அறிக்கைகளை வெளியிட காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.
“பாமக நிறுவனர் ராமதாஸுக்கு ஏதாவது ஆனதென்றால் தொலைத்துவிடுவேன்” என பாமக தலைவர் அன்புமணி எச்சரித்துள்ளார்.
தமிழகத்தின் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும், நீலகிரி மாவட்டத்தில் கன முதல் மிக கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் வரம்புக்குட்பட்ட கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்தது ஏன்” என்று உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது.
“தேர்தல் ஆணையத்தின் கடமையில் தலையிட யாருக்கும் உரிமையில்லை” என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் இறக்குமதியாகும் சீனப் பொருட்களுக்கு 100 விழுக்காடு கூடுதல் வரிவிதிப்பு... நவம்பர் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வருமென அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு...
நியூசிலாந்து நாட்டின் நாடாளுமன்றத்தில் பெண் எம்.பி. ஒருவர், மவோரி கலாசார நடனம் ஆடியதால் அவை நடவடிக்கைகள் முடங்கின.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 318 ரன்கள் குவிப்பு... இளம் வீரர் ஜெய்ஸ்வால் சதம் விளாசி அசத்தல்...
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள காந்தாரா சாப்டர் -1 திரைப்படம் 500 கோடி வசூலைக் கடந்து அசத்தியுள்ளது.
பாகிஸ்தானுக்கு புதிய AMRAAM ஏவுகணைகள் வழங்கப்படும் என வெளியான செய்திகள் தவறானவை என்று அமெரிக்கா தெளிவுபடுத்தியுள்ளது.