சீமான், பெரியார்
சீமான், பெரியார்pt web

“234 இடமும் என் இடம்.. நாடு என் நாடு; உண்மையான கம்யூனிசம் என்னிடம்தான் இருக்கிறது” - சீமான்

“இந்தி எதிர்ப்பு என்று சொல்கிறீர்கள், தமிழ்நாட்டில் முதலில் இந்தி பள்ளியை திறந்தது பெரியார் தான் என திருவிக சொல்கிறார்” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்
Published on

“இந்தி எதிர்ப்பு என்று சொல்கிறீர்கள், தமிழ்நாட்டில் முதலில் இந்தி பள்ளியை திறந்தது பெரியார் தான் என திருவிக சொல்கிறார்” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சென்னை நீலாங்கரை இல்லத்தின் முன் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

அப்போது பெரியார் குறித்த சர்ச்சை தமிழ்நாட்டில் தேவைதானா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “அதை நீங்கள் பெரியாரியவாதிகளிடம் தான் கேட்க வேண்டும். இவர்கள் எந்த பிரச்சினைக்காக நின்றார்கள்? தங்கை ஸ்ரீமதி மரணத்திற்கோ, டங்ஸ்டன் விவகாரத்திலா, அண்ணா பல்கலைக் கழக விவகாரத்திலா எதில் நின்றார்கள்.

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் என எதற்காகவாவது வந்தார்களா? 60 ஆண்டுகளாக பெரியாரை வைத்து நீங்கள் காட்டிய படம் தேவையா? எல்லாமே பெரியார் என்ற அந்த கருத்து தேவையா?” எனத் தெரிவித்தார்.

சீமான், பெரியார்
பரந்தூர் விமான நிலையம் வேண்டுமா? வேண்டாமா? என்ன நினைக்கிறது தமிழ்நாடு? - மக்கள் கருத்து

போராட்டத்தில் சீமான் குறித்து திருமுருகன் காந்தி, “சீமான் அரசியலில் இருந்து அப்புறப்படுத்தப்படப் போகிறார்” பேசியது தொடர்பான கேள்வி எழுப்ப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “இவ்வளவு நாள் என்னை அப்புறப்படுத்தாமல் என்ன செய்தீர்கள்.. தயவுசெய்து அப்புறப்படுத்துங்கள். 32 இயக்கம் சேர்த்து 300 பேரை சேர்க்க முடியவில்லை. உங்கள் பாதுகாப்புக்கு நின்ற காவலர்கள் எண்ணிக்கை தான் அதிகம். பிறகு எதை அப்புறப்படுத்த போகிறீர்கள்? அரை சீட், கால் சீட்டிற்கு கை ஏந்தி நிற்கும் நீங்கள் என்னை கேட்கிறீர்களா? 234 இடமும் என் இடம். நாடு என் நாடு. உண்மையான கம்யூனிசம் என்னிடம் தான் இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

எதிர்த்தரப்பினர் சீமான் பேசியதற்கு ஆதாரம் கேட்கின்றனரே என்ற கேள்விக்கு, “வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. மக்கள் மத்தியில் பெரியாரை பற்றி இத்தனை கேட்கிறேனே, அதற்கு ஏதாவது ஆதாரம் கேட்டீர்களா? நான் ஆதாரத்தை உரிய நேரத்தில் சொல்கிறேன். நீங்கள் வழக்கு போட்டீர்கள். நீங்கள் நிறுத்தும் போது பதில் சொல்கிறேன். எத்தனையோ பேர் பேசியபோது வராத கோபம் நான் பேசிய போது மட்டும் ஏன் வருகிறது?” எனத் தெரிவித்தார்.

சீமான், பெரியார்
அதிபராக ட்ரம்ப் பதவியேற்றவுடன் திருப்பம்.. நாசா நிர்வாகிகள் இருவர் ராஜினாமா! பின்னணி என்ன?

சீமான் வீட்டை முற்றுகையிட போராட்டக்காரர்கள் வந்தது குறித்த கேள்விக்கு, “நீங்கள் என் வீட்டை முற்றுகையிடவில்லை. அந்த சலூன் கடையை தானே முற்றுகையிட்டீர்கள். தமிழன் மரபு கோட்டையை முற்றுகையிடுவது திராவிட மரபு வீட்டை முற்றுகையிடுவது. பயந்து ஓடி விடுவேன் என்று நினைக்கிறீர்களா?

பெரியாரை அதிகப்படியாக தமிழகத்தில் விமர்சித்த கட்சி திமுகதான் என திருமுருகன் காந்தியே சொல்லியிருக்கிறார். இந்தி எதிர்ப்பு என்று சொல்கிறீர்கள், தமிழ்நாட்டில் முதலில் இந்தி பள்ளியை திறந்தது பெரியார் தான் என திருவிக சொல்கிறார். காங்கிரஸ் கட்சியில் இருந்ததால் அழைத்தார்கள் நானும் பங்கேற்றேன் என எழுதியுள்ளார். நாங்கள் எதையும் ஆதாரம் இல்லாமல் பேசவில்லை. என் படத்தை நானும் எங்க அண்ணனும் இருப்பதை வெட்டி ஒட்டியதாக சொல்கிறீர்களே அதற்கு ஆதாரம் காட்டுங்கள். புதிதாக நாங்கள் எதையாவது இட்டு கட்டி பேசினோமா? பெரியார் பேசியதை தானே சொல்கிறோம்” எனத் தெரிவித்தார்.

சீமான், பெரியார்
பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க கடும் கட்டுப்பாடு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com