அதிபராக ட்ரம்ப் பதவியேற்றவுடன் திருப்பம்.. நாசா நிர்வாகிகள் இருவர் ராஜினாமா! பின்னணி என்ன?
உலக அளவில் தற்போது பேசுபொருளாக இருப்பது டொனால்டு ட்ரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்றுக் கொண்டதும், பதவியேற்புக்கு பின் அவர் ஆற்றிய உரை மற்றும் உத்தரவுகள் தான். ட்ரம்ப் கொண்டுவந்த பல மாற்றங்கள் உலக வர்த்தகங்கள் மற்றும் பங்குசந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தின.
இந்நிலையில், அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா-வின் நிர்வாகி மற்றும் துணை நிர்வாகியும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
நேற்று அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் ட்ரம் பதவி ஏற்றுக்கொண்டதும், நாசாவின் நிர்வாகியான பில் நெல்சன் மற்று துணை நிர்வாகியான பாம் மெல்ராய் ஆகியோர் தங்களின் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். பில் நெல்சன் நாசாவில் 53 ஆண்டுகாலமாக பணியாற்றியுள்ளார். இந்நிலையில், புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தின் இயக்குநராக பணியாற்றிய ஜேனட் பெட்ரோவை நாசாவின் இடைக்கால தலைவராக ட்ரம்ப் நியமித்துள்ளார்.
இது குறித்து பில் நெல்சன் தனது X வலைதள பக்கத்தில் ”53 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நான் அரசுப் பதவியை விட்டு வெளியேறும்போது வாழ்நாள் முழுவதும் நம் நாட்டு மக்களுக்குச் சேவையாற்றும் பெரும் பாக்கியத்திற்கு நன்றி நான் பணிவாகவும் நன்றியுடனும் இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
ஜனநாயகக் கட்சியின் உறுப்பினரான நெல்சன், அரசியல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு சிறப்புமிக்க வாழ்க்கையைக் கொண்டிருந்தார். அவர் 1972 இல் புளோரிடா பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் புளோரிடாவின் 9வது காங்கிரஸ் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமெரிக்க சபையில் பணியாற்றினார். 1986 ஆம் ஆண்டில், கொலம்பியா விண்வெளி விண்கலத்தில் (STS-61-C ) விண்வெளியில் பறந்த முதல் காங்கிரஸ் உறுப்பினரானார்.
NASA தலைவராக நெல்சனின் பதவிக்தப்பொழுது, $10 பில்லியன் ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப், யூரோபா கிளிப்பர் ஆய்வு, DART சிறுகோள்-ஸ்மாஷிங் விண்கலம் மற்றும் ஆர்ட்டெமிஸ் 1 நிலவுப் பணி போன்ற திட்டங்களை செயல்படுத்தி வெற்றியைக்கண்டவர்.