\
Northeast Monsoon Begins Today Alert for 15 Districts
RAINANI

தொடங்கும் வடகிழக்கு பருவமழை.. சென்னை உள்பட 15 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

சென்னையின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
Published on: 

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சூழல் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மத்திய கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதேபோல குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதையொட்டி இன்று, தமிழ்நாட்டின் நீலகிரி, கோவை, தேனி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. நாகை, திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர், திருச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பூர், சேலம், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

heavy rain
heavy rainreuters

புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் அநேக இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com