திருச்சி: முன்விரோதம் காரணமாக அதிமுக முன்னாள் பெண் கவுன்சிலரின் மகன் வெட்டிக் கொலை

அரியமங்கலத்தில் அதிமுக முன்னாள் கவுன்சிலரின் மகன் பட்டப்பகலில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tragedy
Tragedypt desk

செய்தியாளர்: சுரேஷ்

திருச்சி அரியமங்கலம் திடீர் நகரைச் சேர்ந்தவர் கேபிள் சேகர். இவர், முன்னாள் அதிமுக பகுதி செயலாளராகவும், திருச்சி மாநகராட்சி அதிமுக கவுன்சிலராகவும் பதவி வகித்தவர். இவரது மனைவி கயல்விழி, முன்னாள் திருச்சி மாநகராட்சி அதிமுக கவுன்சிலராக இருந்துள்ளார். இவர்களது மகன் முத்துக்குமார் (27). கேபிள் தொழில் செய்து வரும் இவர்கள் பன்றியும் வளர்த்து வருகின்றனர்.

Police investigation
Police investigationpt desk

இந்நிலையில், பன்றி வளர்ப்பதில் இவர்கள் குடும்பத்திற்கும், கேபிள் சேகரின் சகோதரர் பெரியசாமி குடும்பத்திற்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது. தொழில் போட்டியில் ஏற்பட்ட தகராறில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கேபிள் சேகர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அன்றிலிருந்து இன்று வரை இந்த முன்விரோதம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

Tragedy
ஈரோடு: கர்ப்பிணி மர்ம மரணம் - மதுபோதையில் கணவன் அடித்துக் கொன்றதாக உறவினர்கள் போராட்டம்!

இந்நிலையில், திருச்சி அரியமங்கலம் எஸ்.ஐ.டி பேருந்து நிறுத்தம் அருகே இன்று காலை பட்டப் பகலில் முத்துக்குமார் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். துப்பாக்கியுடன் வந்த சில மர்ம நபர்கள் அவருடைய முகத்தை வெட்டி சிதைத்துவிட்டு தப்பியோடி விட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க வந்த அரியமங்கலம் காவல்நிலைய போலீசார், முத்துக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Murder
Murderpt desk

இதையடுத்து இந்த சம்பவம் நடந்த இடத்தில் இருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளைக் கொண்டு போலீசார், முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர். முதற்கட்ட விசாரணையில், தொழில் போட்டி மற்றும் முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இதன் பேரில் போலீசார் விசாரணையை தீவிரப் படுத்தியுள்ளனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொடூர கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

Tragedy
திண்டுக்கல்: குடும்பப் பிரச்னை காரணமாக இரு மகள்களுடன் தாய் எடுத்த விபரீத முடிவு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com