மக்களவை தேர்தல்|”படித்த இளைஞர்களுக்கு வேலை இருக்கா? இல்லையா?” - ப.சிதம்பரம் Vs அண்ணாமலை சொல்வதென்ன?

நாட்டில் படித்த இளைஞர்களுக்கு வேலையில்லை என்ற முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் குற்றச்சாட்டிற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.
ப.சிதம்பரம், அண்ணாமலை
ப.சிதம்பரம், அண்ணாமலைPT

நாட்டில் படித்த இளைஞர்களுக்கு வேலையில்லை என்ற முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் குற்றச்சாட்டிற்கு, ’காங்கிரஸாருக்குதான் வேலையில்லை’ என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.

முன்னதாக தனது பரப்புரையின் போது பேசியிருந்த ப.சிதம்பரம், ”ஐநா சபையின் கீழே செயல்படக்கூடிய சர்வதேச தொழிளாளர்கள் நிறுவனம் 15 நாட்களுக்கு முன் இந்தியாவைப் பற்றிய ஒரு ஆய்வறிக்கையை சமர்பித்தது. அதில் இந்தியாவில் இளைஞர்கள் மத்தியில் வேலையின்மையானது 35 % இருந்தது. இப்பொழுது 65% அதிகரித்துள்ளது. பட்டதாரிகள் மத்தியிலே 42% வேலையில்லாமல் இருக்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.

ப.சிதம்பரத்தின் விமர்சனத்திற்கு பதில் அளித்த அண்ணாமலை, “ப.சிதம்பரம் தான் வேலையில்லாமல் இருக்கிறார். இளைஞர்களுக்கு வேலை இருக்கிறது. இவரின் தலைவர் ராகுல்காந்திக்குகூட வேலையில்லாமல் சுத்திகிட்டுதான் இருக்காரு” என்றார். இவர்கள் இருவரும் பேசியதை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com