நீலகிரி
நீலகிரிநீலகிரி

நீலகிரி | காட்டு யானை தாக்கி தபால் நிலைய பெண் ஊழியர் உயிரிழப்பு

கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தபால் நிலைய ஊழியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Published on

செய்தியாளர்: மகேஷ்வரன்

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள மசினகுடி பகுதியில் உள்ள தபால் நிலையத்தில் பணியாற்றி வந்தவர் சரசு (58).. இவர், நேற்று மாலை பொக்காபுரம் பகுதியில் பணியை முடித்துவிட்டு தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது சாலை நடுவே காட்டு யானை ஒன்று நின்று வாகனங்களை மறித்துள்ளது.

karnataka women ends life over in laws dark skin taunts
model imagePT

இதையடுத்து சரசுவை அவரது கணவர் இருசக்கர வாகனத்தில் இருந்து இறங்கச் சொல்லிவிட்டு வாகனத்தை திருப்ப முயன்றுள்ளார். அப்போது யானை திடீரென சரசுவை நோக்கி வந்த நிலையில், அவர் நிலைதிடுமாறி கீழே விழுந்துள்ளார். இந்நிலையில், அவர் அருகில் வந்த யானை தாக்கயுள்ளது.p

நீலகிரி
”என் மகனின் உடல்நிலை குறித்து அவதூறு..” - நடவடிக்கை எடுக்க நெப்போலியன் தரப்பு போலீசில் புகார்

இதில், படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com