”என் மகனின் உடல்நிலை குறித்து அவதூறு..” - நடவடிக்கை எடுக்க நெப்போலியன் தரப்பு போலீசில் புகார்
செய்தியாளர்: இ.முத்துப்பாண்டியன்
நடிகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான நெப்போலியன், அவருடைய மகன் தனுஷ் உடலநிலை பாதிக்கப்பட்டு திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகே இருக்கும் பிரபல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது உடல்நிலை முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த அக்ஷயா என்ற பெண்ணை திருமணம் செய்து குடும்பத்தோடு அமெரிக்காவில் வசித்து வருகிறார்கள்.
மயோபதி தசைத் திறன் மாறுபாடு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் மருத்துவர் டேனியல் ராஜா என்பவர் நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார் இதில், நெப்போலியனின் மூத்த மகன் தனுஷின் உடல்நலம் குறித்து தொடர்ந்து பொதுத்தளத்தில் அவதூறுகளை பரப்பி வருகிறார்.
அந்த அவதூறு செய்தியை பரப்பி வரும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ள அவர், தனுஷ் மற்றும் அவருடைய மனைவி அக்ஷயா ஆகிய இருவரும் நல்ல உடல் நலத்துடன் சேர்ந்து வாழ்ந்து வருவதாக அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.