நீலகிரி: நடைப்பயிற்சி சென்றவர்களை விரட்டிய கரடி; அலறியடித்து ஓடிய மக்களுக்கு நேர்ந்த சோகம்!

பந்தலூரில் நடைப்பயிற்சி சென்றவர்களைக் கரடி விரட்டி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரடி
கரடிபுதிய தலைமுறை

நீலகிரி மாவட்டம், பந்தலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாகக் கரடி ஒன்று தொடர்ச்சியாகப்  பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. எண்ணெய் குடிப்பதற்காக வீடுகள் மற்றும் கடைகளைக் கரடி தொடர்ச்சியாக உடைத்துச் சேதப்படுத்தி வந்துள்ளது.

பந்தலூர்
பந்தலூர்

இந்தநிலையில் இன்று சாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டவர்களைக் கரடி துரத்தியுள்ளது. இதனால் பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓடியுள்ளார்.

கரடி
சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை...

குறிப்பாக பந்தலூர், கூவமூலா பகுதியைச் சேர்ந்த அஷ்ரப் மற்றும் முகமது குட்டி ஆகியோர் கரடியைப் பார்த்த அச்சத்தில் ஓட்டம் பிடித்துள்ளனர். அப்போது கால் தவறி கீழே விழுந்த முகமது குட்டிக்கு கை மற்றும் கால் பகுதியில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. பின்னர் அஷ்ரப் என்பவர் சத்தம் போட்டதைத் தொடர்ந்து கரடி தேயிலைத் தோட்டத்திற்குள் சென்று பதுங்கியுள்ளது.

கரடி கடித்ததால் காயமடைந்த நபர்
கரடி கடித்ததால் காயமடைந்த நபர்

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர்  கரடி நடமாட்டத்தைத் தொடர்ந்து  கண்காணித்து வருகின்றனர். நடைப்பயிற்சி மேற்கொண்டவர்களைக் கரடி விரட்டிய சம்பவம் அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com