கோவை கார் சிலிண்டர் வெடிப்பு: 12 இடங்களில் NIA அதிகாரிகள் சோதனை

கோவை மற்றும் நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் இன்று அதிகாலை முதல் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை - சோதனை
கோவை - சோதனைpt desk

செய்தியாளர்கள்: சுதீஸ், ராஜூ கிருஷ்ணா

கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23ஆம் தேதி கோவை உக்கடம் கோட்டைமேடு பகுதியில் கார் சிலிண்டர் வெடிப்பு நிகழ்ந்தது. இதில் மூளையாக செயல்பட்ட ஜமீஷா முபின் என்பவர் உயிரிழந்த நிலையில் தற்போது வரை இந்த சம்பவம் தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை கடந்த மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

nellai
nellaipt desk

இந்நிலையில் கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழகம் முழுவதும் என்ஐஏ அதிகாரிகள் தொடர்ந்து சோதனையை நடத்தி வருகின்றனர். இதில் இன்று கோவையில் மொத்தம் 12 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

கோவை - சோதனை
தருமபுரி | வேலைக்கு வந்த பட்டியலின பெண்களுக்கு கொட்டாங்குச்சியில் தேநீர்... மாமியார், மருமகள் கைது

இந்த சோதனையில் குறித்த முக்கிய தகவல்களை, கீழ் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்:

இதேபோல் நெல்லை மாவட்டம் ஏர்வாடியில், பக்ருதீன் அலி அகமது என்பவர் வீட்டிற்கு இன்று அதிகாலை வந்த என்ஐஏ காவல் கூடுதல் கண்காணிப்பாளர் பரத் நயக் தலைமையிலான நான்கு பேர் கொண்ட அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com