கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு: மூவரை கோவைக்கு அழைத்து வந்து NIA அதிகாரிகள் விசாரணை

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று பேரை சென்னையில் இருந்து கோவைக்கு அழைத்து வந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கார் சிலிண்டர் வெடிப்பு
கார் சிலிண்டர் வெடிப்புfile

செய்தியாளர்: சுதீஷ்

கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி கோவை உக்கடம் அருகே கோட்டை ஈஸ்வரன் கோவில் பகுதியில் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இந்த வழக்கில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

கார் சிலிண்டர் வெடிப்பு
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு: 12 இடங்களில் NIA அதிகாரிகள் சோதனை

இதுவரை இவ்வழக்கில் மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

NIA
NIAPT DESK

இந்நிலையில், இன்று மீண்டும் இவ்வழக்கின் விசாரணையில் தேசிய முகமை அதிகாரிகள் ஈடுபட்டிருக்கின்றனர். சென்னை என்.ஐ.ஏ. அதிகாரி விக்னேஷ் தலைமையில் அதற்காக விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்காக இவ்வழக்கில் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட முகமது உசேன், ஜமேசா, உமரி உள்ளிட்ட மூவரை என்.ஐ.ஏ அதிகாரிகள் காவலில் எடுத்து கோவைக்கு அழைத்து வந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

கார் சிலிண்டர் வெடிப்பு
மக்களவைத் தேர்தல் 2024: நேரடியாக மோதிக்கொள்ளும் திமுக - பாஜக.. அதிமுக - பாஜக.. எங்கெல்லாம் தெரியுமா?

இதைத் தொடர்ந்து அவர்கள் மூவரையும் போத்தனூர் இஸ்லாமிக் தொழில்நுட்ப நிறுவனம், குனியமுத்தூர் அரபிக் கல்லூரி ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com