கால் விரல்களால் அழுத்தி கிருமிநாசினியை வெளியேற்ற புதிய கருவி

கால் விரல்களால் அழுத்தி கிருமிநாசினியை வெளியேற்ற புதிய கருவி

கால் விரல்களால் அழுத்தி கிருமிநாசினியை வெளியேற்ற புதிய கருவி

கால்களால் அழுத்தி கிருமிநாசினியை எடுத்துக்கொள்ளும் இயந்திரத்தை வேலூர் அரசு தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.


கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் மிக முக்கிய பங்கு வகிப்பது சமூக இடைவெளி, அடுத்து கைகளை அடிக்கடி கழுவுதல், அதன்பின் முகக் கவசம் அணிவது, ஆகவே இந்த அறிவுறுத்தல்களை மக்கள் கடுமையாகப் பின்பற்ற வேண்டும் என அரசு வலியுறுத்தி வருகிறது. ஆனால் இதில் சிக்கல் என்னவென்றால், பொதுவாக அனைவரின் பயன்பாட்டிற்காக வைக்கப்படும் கிருமிநாசினி பாட்டிலை ஒவ்வொருவரும் அழுத்திப் பயன்படுத்தும் போது, அதன் மூலம் தொற்று பரவ வாய்ப்புள்ளது.

இதனை உணர்ந்த வேலூர் அரசு தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் கால் விரல்களால் அழுத்திப் பயன்படுத்தும் கிருமி நாசினி இயந்திரத்தை உருவாக்கியுள்ளனர். மேலும் அதனை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கும் வழங்கியுள்ளனர்.

சுமார் 3 அடி உயரம் கொண்ட இந்த இயந்திரத்தின் மேல் பகுதியில் கிருமிநாசினி பாட்டில் வைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்பகுதி நமது கால் விரலால் அழுத்தி, அதன் உள்ள திரவத்தை வெளியேற்றும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாம் கைகளால் தொடாமலே கிருமிநாசினி பாட்டிலிருந்து வரும் கிருமிநாசினியை எடுத்துக்கொண்டு கைகளைச் சுத்தம் செய்து கொள்ளலாம். இதனால் ஒருவர் தொட்ட இடத்தில் மற்றொருவர் தொடுவது தவிர்க்கப்படும்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com