\
மழை
மழைpt web

வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழ்நாட்டிற்கு மழைக்கான வாய்ப்பு எப்படி?

வங்கக் கடல் பகுதியில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Published on

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றுச் சுழற்சி அடுத்த 48 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி, அடுத்த இரண்டு நாட்களில் தமிழகம் மற்றும் இலங்கை கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் உருவாகிறது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!
வங்கக் கடலில் உருவாகிறது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!

இது தொடர்பாக சுயாதீன வானிலை ஆய்வாளர் கூறுகையில், "தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்று சுழற்சி நிலவி வருகிறது. இந்த சுழற்சி அடுத்த 48 மணி நேரத்திற்குள், அதாவது நவம்பர் 10 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த காற்றுப் பகுதி தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வட இலங்கை மற்றும் தமிழக கடற்கரையை நோக்கி நவம்பர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் விளைவாக நவம்பர் 11 ஆம் தேதி முதல் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் படிப்படியாக மழையின் தாக்கம் அதிகரிக்கும். குறிப்பாக 11, 12, 13, 14 ஆகிய தேதிகளில் வட கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் பரவலாக கனமழையும், ஓரிரு இடங்களில் மிக கனமழையும் எதிர்பார்க்கலாம். நவம்பர் 11 ஆம் தேதி முதல் தொடங்கும் மழைப்பொழிவு, பெரும் பாதிப்பைக் கொடுக்கக்கூடிய பெருமழையாக அமையாமல், பருவமழை தீவிரமடைந்து மழைப்பொழிவை கொடுக்கும் என எதிர்பார்க்கலாம்" என தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com