\
முல்லைபெரியாறு புதிய அணை விவகாரம்: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

முல்லைபெரியாறு புதிய அணை விவகாரம்: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

முல்லைபெரியாறு புதிய அணை விவகாரம்: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்
Published on

முல்லைபெரியாறு அணைக்கு அருகே புதிய அணை கட்டுவதற்கான ஆய்வறிக்கை தயாரிக்க அனுமதி அளித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய சுற்றுசூழல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வல்லுனர் குழு, கடந்த மாதம் 27ஆம் தேதி நடத்திய கூட்டத்தில், முல்லைப்பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்டுவதற்கான ஆய்வறிக்கை தயாரிக்க கேரளாவுக்கு அனுமதி அளித்ததை கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தமிழக மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி இருப்பதாக கூறியுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 2014 ஆம் ஆண்டு முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை சுட்டிக்காட்டியுள்ளார். உடனடியாக பிரதமர் மோடி இதில் தலையிட்டு சுற்றுசூழல் துறை அமைச்சகத்திடம் பேசி அந்த அனுமதியை திரும்ப பெற வேண்டும் என முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார். வருங்காலத்திலும் கேரளாவின் இது போன்ற முயற்சிகளை ஊக்குவிக்கக் கூடாது என சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்திடம் அறிவுறுத்த வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com