[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்
  • BREAKING-NEWS அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்

மேன்மைமிகு அந்தஸ்து வழங்காததால் சென்னை ஐஐடி ஏமாற்றம் ?

chennai-iit-letter-to-central-government

சென்னை ஐ.ஐ.டி-க்கு எமினன்ஸ் எனப்படும் மேன்மை மிகு அந்தஸ்து வழங்காதது பெருத்த ஏமாற்றம் அளிப்பதாக, அதன் நிர்வாகக் குழுத் தலைவர் மத்திய அரசிற்கு கடிதம் எழுதியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொழிலதிபரும், சென்னை ஐ.ஐ.டி-யின் நிர்வாகக் குழு தலைவருமான பவன் கே கோயங்கா இந்த கடிதத்தை எழுதி இருப்பதாகக் கூறப்படுகிறது. தனியார் நிறுவனத்தின் தரவரிசை அடிப்படையில் மேன்மை அந்தஸ்து முடிவு செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாகவும், மேன்மை மிகு கல்வி நிறுவன அந்தஸ்து வழங்குவதற்கான வல்லுநர் குழுவின் அறிக்கை மற்றும் அரசின் என்ஐஆர்எஃப் அமைப்பு வழங்கிய தரவரிசை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்றும் அவர் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.

Read Also -> முல்லைபெரியாறு புதிய அணை விவகாரம்: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

எனினும், இவ்விவகாரம் குறித்து சென்னை ஐ.ஐ.டி கருத்து கூற மறுத்துவிட்டது. மேன்மை மிகு கல்வி நிறுவன அந்தஸ்து பெற்ற கல்வி நிறுவனங்களை உலகத் தரத்திற்கு முன்னேற்றுவதற்காக அவற்றுக்கு சுதந்திரமாக முடிவெடுக்கும் அதிகாரம், நிர்வாக வளர்ச்சிக்கு ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் ஒரு முறை 1000 கோடி ரூபாய் நிதி உள்ளிட்டவை வழங்கப்படும்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close