மருத்துவமனையில் சுற்றித் திரியும் தெரு நாய்க
மருத்துவமனையில் சுற்றித் திரியும் தெரு நாய்கpt desk

நெல்லை | அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுற்றித் திரியும் தெரு நாய்கள் - நோயாளிகள் அச்சம்

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளை அச்சுறுத்தும் வகையில் சுற்றித் திரியும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
Published on

செய்தியாளர்: மருதுபாண்டி

நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள் மற்றும் வெளி நோயாளிகள் வந்து செல்கின்றனர். இங்கு பல்வேறு நோய்களால பாதிக்கப்பட்ட நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற்று வரும் நிலையில் மருத்துவமனை வளாகத்திற்குள் அதிக அளவு தெரு நாய்கள் சுற்றி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், மருத்துவமனையின் உட்பகுதியில் உள்ள அரங்கிற்கு அருகே தெரு நாய்களின் அட்டகாசம் அதிகரித்து வருவதாக புகார்கள் எழுந்து வந்தவுடன் சமூக வலைதளங்களில் அது தொடர்பான வீடியோ காட்சிகளும் பரவி வருகிறது. நோயாளிகள் இருக்கும் அரை அருகே சுற்றிவரும் தெரு நாய்கள், பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக குற்றச்சாட்டுடன் சமூக வலைதளங்களில் அந்த காட்சிகள் பரவி வருகிறது

மருத்துவமனையில் சுற்றித் திரியும் தெரு நாய்க
திருப்பத்தூர் | நண்பர்களுடன் கிணற்றில் குளிக்கச் சென்ற சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்

இது தொடர்பாக மாநகராட்சி மற்றும் அரசு மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது... தெரு நாய்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அங்குள்ள நாய்களை உடனடியாக பிடித்து வெளியே கொண்டு செல்லப்படும் என்று தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com