அண்ணாமலை
அண்ணாமலை pt desk

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 : தமிழக பாஜக தலைவரை மாற்ற தேசிய தலைமை திட்டம் - என்ன காரணம்?

2026 தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தமிழக பாஜக மாநிலத் தலைவரை மாற்ற பா.ஜ.க. தலைமை திட்டமிட்டுள்ளது. புதிய தலைவராக வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது.
Published on

செய்தியாளர்: விக்னேஷ்முத்து

தமிழக பாஜக தலைவர் தேர்தல். தமிழகம் வருகிறார் கிஷன் ரெட்டி:

தமிழக பா.ஜ.க.வுக்கு புதிய மாநிலத் தலைவர் மற்றும் தேசிய கவுன்சில் உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக தேசிய தலைமை, மத்திய சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை நியமனம் செய்துள்ளது. கிஷன் ரெட்டி கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது தமிழக பொறுப்பாளராக இருந்தார். புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே மண்டல தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இன்னும் சில நாட்களில் கிஷன் ரெட்டி தமிழகம் வர இருக்கிறார்.

vanathi srinivasan
vanathi srinivasanpt desk

சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க பா.ஜ.க. தலைமை விரும்பம்:

தமிழகம் வரும் அவர், பா.ஜ.க. மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு தமிழக பா.ஜ.க.வுக்கு புதிய தலைவரை தேர்வு செய்ய இருக்கிறார். தற்போதைய தலைவர் அண்ணாமலை கடந்த 2021 ஜூலை 8-ம் தேதியில் இருந்து மாநில தலைவராக தொடர்ந்து வருகிறார். அவரது பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில் அவர் மாற்றம் செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

2026-ல் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க பா.ஜ.க. தலைமை விரும்பி வரும் நிலையில் அ.தி.மு.க.வுக்கு இனக்கமாக செயல்படும் தலைமையை கொண்டு வர தேசிய தலைமை திட்டமிட்டு இருக்கிறது.

அண்ணாமலை
மணிப்பூரில் மீண்டும் வெடித்த போராட்டம்; காயமடைந்த தமிழ்நாட்டு காவலர்!

தமிழக பாஜக-வின் அடுத்த மாநிலத் தலைவர் யார்?

இதனால் பாஜக மாநிலத் தலைவராக தற்போதைய துணைத் தலைவரும், தமிழக பா.ஜ.க. சட்டமன்றக்குழு தலைவருமான நயினார் நாகேந்திரன் அல்லது தேசிய மகளிரணி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஆகிய இருவரில் ஒருவர் நியமனம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியிருக்கிறது. அண்ணாமலையை பொருத்தமட்டில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க விரும்பவில்லை. அவர், தலைவராக செயல்படும் பட்சத்தில் கூட்டணி அமைய வாய்ப்பு இல்லாத சூழல் இருப்பதால் மாநிலத் தலைவரை மாற்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Nainar Nagendran
Nainar Nagendranpt desk

சாட்டையடி போராடத்திற்கு உடன்படாத பாஜக தலைமை!

எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக நியமிக்கப்பட்ட போது, நயினார் நாகேந்திரன்தான் தலைவராக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அண்ணாமலைக்கு பா.ஜ.க. தலைமை வாய்ப்பு வழங்கியது. தி.மு.க.வுக்கு எதிராக மாநிலத் தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வரும் சாட்டையடி போராட்டம், திமுக ஆட்சி அகற்றப்படும் வரை செருப்பு அணிய மாட்டேன் என சபதம் உள்ளிட்டவைகளை கட்சி தலைமை ரசிக்கவில்லை எனவும் தமிழகத்தை பொறுத்தமட்டில் இது பிற்போக்குத்தனமான போராட்டமாக மாறியதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

அண்ணாமலை
தவெக பொதுச்செயலாளருக்கு பறந்த உத்தரவு... மார்ச் முதல் சுற்றுப்பயணம்? விஜய் போடும் கணக்கு என்ன?

தமிழிசை சௌந்தரராஜன் மாநிலத் தலைவராக முயற்சி?

இந்நிலையில், அண்ணாமலை விரைவில் மாற்றம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது. அதே நேரத்தில் தமிழிசை சௌந்தரராஜன் ஒரு பக்கம் மாநில தலைவராக முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் அவருக்கு வாய்ப்பு குறைவு எனவும் தகவல் வெளியாகியுள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com