சாதிக்கு ஆதரவாக பேசியதாக கடும் எதிர்ப்பு - நாமக்கல் தொகுதி கொமதேக வேட்பாளர் அதிரடி மாற்றம்

நாமக்கல் மக்களவைத் தொகுதி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
KMDK
KMDKpt desk

நாமக்கல் மக்களவைத் தொகுதி திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த தொகுதியின் வேட்பாளராக சூரியமூர்த்தி என்பவர் அறிவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், ஆணவக்கொலை, சாதி தொடர்பான அவரது பேச்சுக்கள் குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அவர் போட்டியிடுவதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

KMDK Canditat
KMDK Canditatpt desk

இதையடுத்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன், தற்போதைய எம்பி சின்ராஜ் உள்ளிட்டோர் கட்சி நிர்வாகிகளுடன் நாமக்கல்லில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்றிரவு ஆலோசனை நடத்தினர். இதைத் தொடர்ந்து வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த சூரியமூர்த்தி மாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக பதிலாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் தெற்கு மாவட்டச் செயலாளர் மாதேஸ்வரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

KMDK
‘ஆணவக்கொலை செய்வோம் என பேசியவர் திமுக கூட்டணியில் நாமக்கல் MP வேட்பாளர்’ - சாடும் அறப்போர் இயக்கம்!

சூரியமூர்த்தி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வந்த நிலையில், அக்கட்சியின் ஆட்சி மன்றக் குழு கூட்டத்தில் சூரியமூர்த்திக்கு பதிலாக மாதேஸ்வரன் தேர்வு செய்யப்பட்டதாக கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com