‘ஆணவக்கொலை செய்வோம் என பேசியவர் திமுக கூட்டணியில் நாமக்கல் MP வேட்பாளர்’ - சாடும் அறப்போர் இயக்கம்!

ஆணவக்கொலை செய்வோம் என்றும் சாதி ரீதியாக வெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலும் வெளிப்படையாகப் பேசியவர் திமுக கூட்டணியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது எப்படி என்பது குறித்து அறப்போர் இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
சூரியமூர்த்தி
சூரியமூர்த்திமுகநூல்

திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த முறை போட்டியிட்ட நாமக்கல் தொகுதியிலேயே, இந்த முறையும் அந்தக் கட்சி போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளராக சூரியமூர்த்தி என்பவரை அக்கட்சி அறிவித்துள்ளது. திமுகவின் உதயசூரியன் சின்னத்திலேயே அவர் போட்டியிடுகிறார்.

சூரியமூர்த்தி
சூரியமூர்த்தி

இந்நிலையில், சூரியமூர்த்தி கடந்த காலங்களில் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில் அவர் ஆணவக்கொலை குறித்தும், சாதிய ரீதியாக வெறுப்புணர்வுடன் பேசியிருப்பது குறித்தும் அறப்போர் இயக்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

சூரியமூர்த்தி
மக்களவை தேர்தல் 2024 | திமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்!

கூட்டணி கட்சி தலைவர்கள் மட்டுமல்ல, எதிர்க்கட்சி தலைவர்கள் கூட சூரியமூர்த்தியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்காமல் இருப்பதாக அந்த இயக்கம் கூறியுள்ளது.

சாதி வெறுப்புணர்வை தூண்டும் வகையில், ஆணவக்கொலை ஆதரவாக பேசிய நபர், மக்களவைத் தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது குறித்து திமுக தலைமை மறுபரிசீலணை செய்து முடிவெடுக்க வேண்டும் என்றும் அறப்போர் இயக்கம் குறிப்பிட்டுள்ளது.

சூரியமூர்த்தி
மக்களவை தேர்தல் 2024 | அதிமுக 2-ம் கட்ட வேட்பாளர் லிஸ்ட்... முழு விவரம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com