தமிழ்நாடு
நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்க கோரி அவரது தாயார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு
நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்க கோரி அவரது தாயார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினிக்கு ஒரு மாதம் பரோல் கேட்டு அவரது தாயார் பத்மா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு நளினி உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கக்கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதை அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் தன்னுடைய உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் தன்னுடைய மகள் நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்க கடந்த மே மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் உள்துறை செயலாளருக்கு அனுப்பிய மனு மீது எந்த முடிவும் எடுக்கப்படாமல் உள்ளதாகவும் அதில் தெரிவித்துள்ளார். இந்த மனு டிசம்பர் 20ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.
இதையும் படிக்க: ரவிச்சந்திரனுக்கு மேலும் ஒருமாதம் பரோல் நீட்டிப்பு

