விஜயை கடுமையாக விமர்சித்த நயினார் நாகேந்திரன்
விஜயை கடுமையாக விமர்சித்த நயினார் நாகேந்திரன்web

’விஜய் திரிஷாவிடம் இருந்து வெளியே வரட்டும்..’ கடுமையாக விமர்சித்த நயினார்!

விஜய் முதலில் வீட்டிலிருந்து வெளியே வரவேண்டும், திரிஷாவிடம் இருந்து வெளியே வரட்டும் என கடுமையாக விமர்சித்து பேசினார்.
Published on
Summary

சேலத்தில் நடந்த தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய், தன்னைபோல தனிகட்சி ஆரம்பிக்க எதிர்கடியில் இருப்பவர்களுக்கு திராணி இருக்கா என பேசினார். இதற்கு பதிலளித்த பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், விஜய் முதலில் வீட்டிலிருந்தும், திரிஷாவிடம் இருந்தும் வெளியே வர வேண்டும் என கடுமையாக விமர்சித்தார்.

சேலம், சீலநாயக்கன்பட்டி பைபாஸ் பகுதியில் உள்ள தாளமுத்து நடராஜன் மைதானத்தில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் இன்று நடைபெற்றது.

இதில் பேசிய தவெக தலைவர் விஜய், “ஹே விஜய் வீட்டைவிட்டு வெளிய வா.. பனையூரை விட்டு வெளிய வா என்பவர்களுக்கு என் வீடு எங்கிருக்கிறது என்பது தெரியுமா? இந்த தமிழ்நாடு என்பது மற்றவர்களுக்கு வேண்டுமானால் மாநிலமாக இருக்கலாம். என்னைப் பொறுத்தவரை என் தாய்நாடான தமிழ்நாடுதான் என் வீடு. என் வீட்டில் 8 கோடிபேர் இருக்கிறார்கள். ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் என் வீட்டு மக்கள். என் குடும்பம் என் உறவு; என் சொந்தம். எனக்கு எல்லாமும் கொடுத்த இந்த சொந்தங்களுக்கு எல்லாமுமாக உடன் இருக்கப்போவது இந்த விஜய் மட்டும்தான்” என பேசினார்.

சேலம் கூட்டத்தில் விஜய்
சேலம் கூட்டத்தில் விஜய்Pt web

மேலும் எதிர்கட்சியினருக்கு சவால் விட்ட விஜய், ”அடுத்தவர்கள் ஆரம்பித்த அரசியல் கட்சியில், அரசியல்வாதிகளாக இருந்துகொண்டு இருப்பவர்களுக்கு ஒரு சவால்.. என்னை மாதிரி சொந்தமாக ஒரு கட்சி ஆரம்பித்து 1 சதவீதம் ஓட்டு வாங்கி காட்டும் தில்லு அவர்களுக்கு இருக்கிறதா? திராணி இருக்கிறதா?” என பேசியிருந்தார்.

இந்தநிலையில் அந்தக் கேள்விக்கு பதிலளித்திருக்கும் நயினார் நாகேந்திரன், விஜய் முதலில் வீட்டிலிருந்தும், திரிஷாவிடம் இருந்தும் வெளியே வரட்டும் என கடுமையாக விமர்சித்துள்ளார்.

விஜயை கடுமையாக விமர்சித்த நயினார் நாகேந்திரன்
"தவெகவினர் கூறுவது உண்மையல்ல.." இறந்தவரின் நண்பர் பரபரப்பு பேட்டி!

திரிஷாவிடம் இருந்து வெளியே வரட்டும்..

தன்னைப்போல தனிக்கட்சி ஆரம்பித்து 1% ஓட்டு வாங்க தில் இருக்கா என்று விஜய் எழுப்பிய கேள்வி குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், “பாவம் விஜய் அனுபவமே இல்லாதவர், முதலில் அவர் வீட்டில் இருந்து வெளியே வரட்டும், திரிஷாவிடம் இருந்து வெளியே வரட்டும். குடும்பத்தோடு நல்ல உறவு வைக்க வேண்டும், நல்ல தலைவர்கள் வழி நடத்திய இயக்கத்தை நல்ல முறையில் சொல்ல வேண்டும், வீட்டிலிருந்து வெளியே அவர் வரவேண்டும்.

களத்தில் ஒரு கவுன்சிலர் கூட இல்லாதவன், கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போக முடியுமா?இதுதான் விஜய்க்கு பதில். ஒருக்காலும் அவரால் முடியாது.

அனுபவத்தில் பார்க்க வேண்டும் சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும். அவர் ஒரு நடிகர் என்பதால் இப்படி சொல்ல முடியுமா? அவர் முதலில் வீட்டிலிருந்து வெளியே வரவேண்டும். நான் அவரைப் பற்றி பேசவே போவதில்லை, அவர் ஒரு ஆளே கிடையாது. அவருக்கு கூட்டம் வந்து என்ன பிரயோஜனம் ஓட்டாக வர வேண்டாமா விஜயகாந்த்திற்கு கூடாத கூட்டமா? விஜயால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது” என கடுமையாக விமர்சித்தார்.

விஜயை கடுமையாக விமர்சித்த நயினார் நாகேந்திரன்
சேலம் | தவெகவினர் மற்றும் செய்தியாளர்கள் இடையே மோதல்.. என்ன நடந்தது?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com