நாகை டூ இலங்கை | இன்று முதல் மீண்டும் துவங்கிய பயணிகள் கப்பல் சேவை
செய்தியாளர்: என்.விஷ்ணுவர்த்தன்
நாகை - காங்கேசன் துறைமுகம் இடையே கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி சுபம் என்ற பயணிகள் கப்பல் சேவை தொடங்கியது. வாரம் 5 நாட்கள் இரு மார்க்கமும் சென்று வந்த கப்பல், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் பாதுகாப்பு கருதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இதையடுத்து கடந்த 12ம் தேதி கப்பல் சேவை மீண்டும் தொடங்க இருந்த நிலையில், தொழில்நுட்ப சான்றிதழ் அனுமதி கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. பின்னர் அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டதை அடுத்து இன்று பயணிகள் கப்பல் 83 பயணிகளுடன் நாகை துறைமுகத்தில் இருந்து புறப்பட்டது.
இனி செவ்வாய்க்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்களும் இயக்கப்பட உள்ள இந்த கப்பல் போக்குவரத்தை இந்து, கிறிஸ்டின், முஸ்லிம் என மும்மதத்தைச் சார்ந்தவர்களும் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இரு மார்க்கத்திற்கும் சேர்த்து கட்டணமாக ரூ.8500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.