நாகை | திருச்செங்காட்டங்குடி திருத் தேரோட்டம் - பக்தி பரவசத்தோடு வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்!
செய்தியாளர்: மாதவன்
நாகை மாவட்டம் திருமருகல் அடுத்து அமைந்துள்ள கிராமம் திருச்செங்காட்டங்குடி. இங்கு உத்திராபதீஸ்வரர் அருள் புரிந்து வருகிறார். இந்த ஆலயத்தில் சித்திரை பரணி பெருவிழா விமர்சையாக நடைபெறும். இந்த கோயிலில் அமுது படையல் எனும் அன்னதானம் இன்று நடைபெற உள்ளது. இந்த அன்னதானத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு உணவு அருந்திச் செல்வார்கள்.
இதற்கு முன் நேற்றிரவு உத்ராபதீஸ்வரர் வலம் வரும் தெரு அடைத்தான் சப்பர தேரோட்டம் நடப்பது வழக்கம். இந்நிலையில், நேற்றிரவு நடைபெற்ற தரு அடைத்தான் சப்பர தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். சுமார் 60 அடி உயரத்திற்கு மேலாக இருக்கும் இந்த தெரு அடைத்த சப்பர தேர் தெரு முழுவதையும் அடைத்து வருவதால் இதனை தெரு அடைத்தான் சப்பரம் என்றழைப்பர்.
இந்த தேர்த் திருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தெரு அடைத்தான் சப்பர தேரை வடம் பிடித்து இழுத்து வந்து நிலை அடியில் சேர்த்தார்கள்.