meta ai rayban glasses
meta ai rayban glassesweb

முடிவுக்கு வரும் ஸ்மார்ட்ஃபோன்கள் ஆதிக்கம்... இனி ஸ்மார்ட் கிளாஸ்களே எதிர்காலம்! விவரம்

வாழ்க்கை டிஜிட்டல்மயமாக மாறிவிட்ட நிலையில் அதன் ஆதாரப்பொருளாக ஸ்மார்ட்ஃபோன்கள் உள்ளன. ஆனால் எதிர்காலத்தில் ஸ்மார்ட்ஃபோன்களின் இடத்தை ஸ்மார்ட்கிளாஸஸ் (SMART GLASSES) பிடிக்கும் என கூறப்படும் நிலையில் அதற்கான சந்தையும் சூடுபிடிக்கத்தொடங்கிவிட்டது.
Published on

ஃபேஸ்புக் சமூகதளம் மூலம் டிஜிட்டல் உலகில் முத்திரை பதித்த மார்க் சக்கர்பர்க்கின் அடுத்த இலக்கு ஸ்மார்ட் கிளாஸ்கள். ஸ்மார்ட்ஃபோன்களின் காலம் முடிந்துவிட்டது, இனி ஸ்மார்ட்கிளாஸ்களுக்குத்தான் எதிர்காலம் எனக்கூறியுள்ளார் அவர். இதற்கேற்பவே அவரது வணிக யுக்திகளும் அமைந்துள்ளன.

வரவேற்பு பெரும் ஸ்மார்ட் கிளாஸ்!

ரேபான் கிளாஸ்களை உலகம் முழுக்க மெட்டா நிறுவனம் கடந்த 2 ஆண்டுகளாகவே விற்பனை செய்து வருகிறது. ஏஐ மூலம் இயக்கப்படும் இவை, சந்தையில் பெரும் வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து தற்போது இந்தியாவிலும் களமிறக்கப்பட உள்ளன,

meta ai rayban glasses
meta ai rayban glasses

இதன் தொடர்ச்சியாக சூப்பர்நோவா, ஹைப்பர்நோவா என்று பிரமாண்ட திட்டங்கள் மூலம் இருவித ஸ்மார்ட்கிளாஸ்களை இவர் உருவாக்கி வருகிறார். பயன்பாட்டாளர், தேவைப்படும் இடம் என இரு வகைகளின் அடிப்படையில் இவை தயாரிக்கப்பட உள்ளன.

பில்ட்இன் ஸ்பீக்கர்கள், கேமரா, மின்னணு திரை என தோற்றம் கொண்ட இவற்றை ஏஐ தொழில்நுட்பம் இயக்கும். எந்த தகவல் கேட்டாலும் அதை அளிக்கும் வகையில் இந்த ஸ்மார்ட் கிளாஸ்கள் இருக்கும். இணையதள வசதி, உயர் தர இசை
அனுபவம், மொழி பெயர்ப்பு, அழைப்புகள், மெசேஜிங் போன்ற
செயல்களுக்கும் இது உதவும்.

விலை 85,000 ரூபாய்..

சுருக்கமாக சொன்னால், ஸ்மார்ட் கிளாஸ்களை கண்ணில் பொருத்தப்படும் ஸ்மார்ட்ஃபோன்கள் என்றே கூறலாம். மெட்டா
அறிமுகப்படுத்தப்போகும் உயர் தொழில்நுட்ப ஸ்மார்ட் கிளாஸ்களின் விலை சுமார் 85 ஆயிரம் ரூபாய் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

ரேபான் மெட்டா கிளாஸ்களுக்கு போட்டியாக ஆப்பிள், கூகுள் போன்ற நிறவனங்களும் மேம்படுத்தப்பட்ட அதிநவீன ஸ்மார்ட் கிளாஸ்களை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தொழில்நுட்ப உலகில் செய்திகள் கசிந்துள்ளன. இதன் மூலம் ஸ்மார்ட் கிளாஸ் சந்தையில் போட்டி மேலும் விறுவிறுப்பானதாக மாற்றியிருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளிலேயே ஸ்மார்ட்
கிளாஸ்கள் சாமானியர்களையும் எட்டும் நிலை ஏற்பட்டுவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com