நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் உடல் மீட்கப்பட்ட இடத்தில் கிடைத்த புதிய ஆதாரம்!

நெல்லை காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமார் தனசிங்கின் உடல் மீட்கப்பட்ட இடத்தில் இருந்து டார்ச் லைட் ஒன்றை காவல்துறையினர் தற்போது கைப்பற்றியுள்ளனர்.
ஜெயக்குமார்
ஜெயக்குமார்pt web

நெல்லை காங்கிரஸ் பிரமுகர் ஜெயக்குமார் தனசிங் மர்மமான முறையில் உயிரிழந்திருந்தார். இந்நிலையில் அவர் இறந்த இடத்தில் இருந்து எரிந்த நிலையில் டார்ச் லைட் கைப்பற்றப்பட்டுள்ளது. முன்னதாக ஜெயக்குமார் தனசிங் கடைசியாக கடைக்கு சென்று டார்ச் லைட் வாங்கியது காவல்துறை விசாரணையில் தெரியவந்திருந்தது. இந்நிலையில் அந்த டார்ச் லைட் கைப்பற்றப்பட்டுள்ளது.

எனவே, கைப்பற்றப்பட்ட உடல் ஜெயக்குமாரின் உடல்தான் என்பதை காவல்துறையினர் தற்போது உறுதி செய்துள்ளனர். மேலும் கைப்பற்றப்பட்ட டார்ச் லைட்டை ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ள காவல்துறையினர், சம்பவ இடத்தில் இருந்து கூடுதல் தடயங்களையும் தேடி வருகின்றனர்.

ஜெயக்குமார்
நீடிக்கும் மர்மம்... மரணமடைந்த காங். நிர்வாகி ஜெயக்குமார் தனசிங் தோட்டக் கிணற்றில் கிடைத்த கத்தி!

ஏற்கனவே, அங்குள்ள கிணற்றில் இருந்து பழைய கத்தியும் கண்டெடுக்கப்பட்டு, ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஜெயக்குமார் படுகொலை தொடர்பாக, அனைத்து கோணங்களிலும் காவல்துறை விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com