\
கௌசிக்
கௌசிக்PT

மக்களவை தேர்தல் 2024 | தமிழ் படிக்கத் தெரியாத நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கௌசிக்

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நாம் தமிழர் கட்சியின் விருதுநகர் வேட்பாளரான கௌசிக் தனது மனுவை தாக்கல் செய்தார்.
Published on: 

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாடு முழுவதும் பல கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் மனுவை தாக்கல் செய்து வருகின்றனர். அப்படி நாம் தமிழர் கட்சியின் விருதுநகர் வேட்பாளரான கௌசிக் தனது மனுவை இன்று தாக்கல் செய்தார். ஆனால் அவருக்கு தமிழ் படிக்கத் தெரியாததால், தமிழில் இடம்பெற்றிருந்த உறுதிமொழியை படிக்கத் தெரியாமல் திணறினார்.

இதையடுத்து அவருக்கு உதவிய தேர்தல் அலுவலர் ஜெயசீலன், உறுதிமொழியினை அவர் படித்துக்காட்ட அதை அப்படியே திருப்பிச்சொன்னார் கௌசிக். வேட்பாளர் கௌசிக், மருத்துவர் எனக் கூறப்படுகிறது. அவருக்கு தமிழ் பேசத்தெரியும் என்றும், வாசிக்கத்தெரியாது என்றும் தெரிகிறது. அவர் ஓமன் நாட்டில் பயின்றதால் தமிழ் வாசிப்பதில் சிக்கல் இருப்பதாக நா.த.க. நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

கௌசிக்
மக்களவைத் தேர்தல் 2024 | தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 405 பேர் வேட்பு மனு தாக்கல்...!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com