மக்களவைத் தேர்தல் 2024 | தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 405 பேர் வேட்பு மனு தாக்கல்...!

தமிழகத்தில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய நாளை கடைசி நாள். இதையடுத்து நேற்று ஒரேநாளில் 405 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
சௌமியா அன்புமணி வேட்பு மனு தாக்கல்
சௌமியா அன்புமணி வேட்பு மனு தாக்கல்pt desk

நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20ஆம் தேதி தொடங்கிய நிலையில், அன்றைய தினம் 22 பேரும், 21ஆம் தேதி 9 பேரும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

துரை வைகோ வேட்பு மனு தாக்கல்
துரை வைகோ வேட்பு மனு தாக்கல்pt desk

தொடர்ந்து 22ஆம் தேதி 47 பேர் வேட்பு மனுக்களைசெய்துள்ள நிலையில், நேற்று (25ம் தேதி) 405 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

சௌமியா அன்புமணி வேட்பு மனு தாக்கல்
தூத்துக்குடி: வியாபாரிகள், மீனவர்கள் மத்தியில் கனிமொழிக்கு வாக்கு சேகரித்த முதலமைச்சர் ஸ்டாலின்!

மனுக்களை தாக்கல் செய்ய நாளை (மார்ச் 27) கடைசி நாள். வரும் 28ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெற உள்ளது. வேட்பு மனுக்களை வாபஸ் பெற வரும் 30 ஆம் தேதி கடைசி நாள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com