\
'திராவிடக் களஞ்சியம்' என்று பெயரிட முனைந்தால் போராட்டம் - சீமான்

'திராவிடக் களஞ்சியம்' என்று பெயரிட முனைந்தால் போராட்டம் - சீமான்

'திராவிடக் களஞ்சியம்' என்று பெயரிட முனைந்தால் போராட்டம் - சீமான்
Published on
சங்கத்தமிழ் இலக்கியங்கள் உள்பட எந்தவொரு தமிழ் நூல்களின் தொகுப்பிற்கும் திராவிடக் களஞ்சியம் என்று பெயரிட முனைந்தால் போராட்டம் நடத்தப்படும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சீமான் விடுத்துள்ள அறிக்கையில், சட்டப்பேரவையில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகளில் தமிழ் நூல்களை தொகுத்து திராவிடக் களஞ்சியம் என அடையாளப்படுத்தப் போவதாக அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார். தமிழர் அடையாள அழிப்பு முயற்சியை ஆளும் திமுக அரசு கைவிட்டு, தமிழ் நூல்களின் தொகுப்புக்கு 'தமிழ்க்களஞ்சியம்' என்றே பெயர் சூட்ட வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com