கொலை செய்யப்பட்ட வழக்கறிஞர் கௌதம்pt desk
தமிழ்நாடு
சென்னை: வழக்கறிஞரை வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பியோடிய மர்ம நபர்கள் - போலீசார் விசாரணை
திருவான்மியூரில் வழக்கறிஞரை வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பியோடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
செய்தியாளர்: சாந்த குமார்
சென்னை திருவான்மியூர் தெற்கு நிழற்சாலை பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க வந்த வழக்கறிஞர் கௌதம் என்பவரை மர்ம நபர்கள் சிலர் வெட்டி விட்டு தப்பியோடி விட்டனர்.
murderpt desk
தகவலறிந்து வந்த திருவான்மியூர் போலீசார், அவரை மீட்டு அடையார் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு வழக்கறிஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வரும் கௌதமை யார் வெட்டியது, என்ன காரணம் என பல்வேறு கோணங்கலிலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதையடுத்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.