மலாவி துணை அதிபர் சவ்லோஸ் சிலிமா சென்ற விமானம் விபத்து- 10 பேர் உயிரிழப்பு

மோசமான வானிலை காரணமாக விமான விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மலாவி துணை அதிபர் சவ்லோஸ் சிலிமா
மலாவி துணை அதிபர் சவ்லோஸ் சிலிமாகூகுள்

மலாவி துணை அதிபர் சவ்லோஸ் சிலிமா மற்றும் அவருடன் பயணித்த அதிகாரிகள் 9 பேரும் விமான விபத்தில் உயிரிழந்தனர்.

கிழக்குஆப்ரிக்கா, மலாவி நாட்டின் துணை அதிபர் சவ்லோஸ் சிலிமா மற்றும் அவரது மனைவி மேரி மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் என10 பேர் அடங்கிய குழு ஒன்று ராணுவ விமானத்தின் மூலம் தலைநகர் லிலொங்வேயிலிருந்து சுமார் 370 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மசுஸு சர்வதேச விமான நிலையத்துக்கு புறப்பட்டுச் சென்றனர்.

இவர்கள் பயணித்த ராணுவ விமானம், லிலொங்வேயிலிருந்து 45 நிமிடங்களில் மசுஸு விமான நிலையத்தை அடைய வேண்டிய நிலையில் விமானமானது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து இருக்கிறது.

அதன்பிறகு தேடுதல் பணியை தொடங்கிய அதிகாரிகள் சிகன்காவா மலைப்பகுதியின் அருகில் உள்ள காட்டுப்பகுதியில் விமானம் நொறுங்கிய நிலையில் கிடந்ததை கண்டுபிடித்துள்ளனர். இவருடன் பயணித்த அனைவரும் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. மோசமான வானிலை காரணமாக விமானம் விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என்று மலாவி அரசு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com