மது குடித்த மாணவி மர்ம மரணம்
மது குடித்த மாணவி மர்ம மரணம்pt desk

சென்னை | விடிய விடிய மது குடித்து விட்டு உறங்கிய மாணவி மர்ம மரணம்.. தோழி வீட்டில் அதிர்ச்சி சம்பவம்!

கேளம்பாக்கத்தில் விடிய விடிய மது குடித்து விட்டு உறங்கிய தனியார் கல்லூரி மாணவி உயிரிழப்பு. போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Published on

செய்தியாளர்: சாந்த குமார்

சென்னை புறநகர் பகுதியில் இயங்கி வரும் தனியார் கல்லூரியில் மாணவி ஒருவர் இரண்டாமாண்டு பிசிஏ படித்து வந்தார். தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், கடந்த 28ம் தேதி தன்னுடைய தோழி வீட்டில் தங்கி, சக கல்லூரி மாணவிகளுடன் சேர்ந்து நேற்று இரவு 9 மணி முதல் விடிய விடிய மது அருந்தியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அனைவரும் மது போதையில் தூங்கியுள்ளனர். ஆனால், மாலை 4.30 மணி ஆகியும் அந்த மாணவி மட்டும் எழுப்பியும் எழுந்திருக்காமல் தூங்கிக் கொண்டே இருந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த தோழிகள், அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நாடித்துடிப்பு குறைவாக இருப்பதாகக் கூறி சிகிச்சை அளித்துள்ளனர்.

மது குடித்த மாணவி மர்ம மரணம்
மதுரை | ஜேசிபி-யால் சாலையோரம் நின்றிருந்த வாகனங்களை சுக்குநூறாக்கிய 17 வயது சிறுவன்! போதையில் ரகளை?

ஆனால் அவர், சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தகவலறிந்து அங்கு சென்ற கேளம்பாக்கம் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். கல்லூரி மாணவி இறப்பிற்கு மது தான் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com