“ஆட்சியே போனாலும் பரவாயில்லை.. சனாதன ஒழிப்புத்தான் முக்கியம்” - அமைச்சர் உதயநிதி திட்டவட்டம்

”ஆட்சியே போனாலும் பரவாயில்லை.. கொள்கை தான் முக்கியம்”.. என அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
உதயநிதி
உதயநிதிpt web
Published on

திமுகவில் புதிதாக தொடங்கப்பட்ட விளையாட்டு மேம்பாட்டு அணியின் முதல் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். நிகழ்வு முடிந்ததும் அமைச்சர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “9 ஆண்டுகளுக்கு முன்பு மோடி இந்தியாவையே மாற்றிக் காட்டுவேன் என்று சொன்னார் . தற்போது ஜி.20 மாநாட்டில் பாரத் என பெயர்ப்பலகை வைத்ததன் மூலம் , தான் சொன்னைதை செய்துவிட்டார்..வாழ்த்துகள்..

திமுக என்ற கட்சியே சனாதானத்தை ஒழிக்க தான் ஆரம்பிக்கப்பட்டது , ஆட்சியைப் பற்றியெல்லாம் கவலை கிடையாது. கொள்ளைக்காக முழுமையாக நிற்போம்.

என்னை தொட்டால் 10 லட்சம் தருவதாக சொல்லியுள்ளனர், எனக்கு டிமான்ட் அதிகமாகி கொண்டே செல்கிறது. சனாதனம் குறித்து அம்பேத்கர், பெரியார், அண்ணா பேசாததையா நான் பேசிவிட்டேன். பொய் செய்தி பரப்புவதே பாஜகவின் முழு நேர வேலை .

அதிமுக என்ற கட்சியின் பெயரில் அண்ணா பெயர் உள்ளது , சனாதனத்திற்கு எதிராக அண்ணாதான் அதிகம் பேசியுள்ளார். எனவே சனாதனம் தொடர்பாக தற்போது எழுந்த பிரச்சனையில் அதிமுகவின் கருத்தை நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

சனாதனம் தொடர்பாக நான் பேசியது விமர்சிக்கப்படுவதற்கு காரணம் தனி மனித தாக்குதல் அல்ல...கொள்கை தாக்குதல்” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com