புதுக்கோட்டை: தேர் திருவிழாவில் பக்தர்களை நெகிழ வைத்த இஸ்லாமியர்கள்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோவிலில் நடந்த தேரோட்டத் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் வீரமாகாளியம்மன் கோவில் ஆடி பெருக்குத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்து வழிபாடு நடத்தினர். அப்போது அறந்தாங்கி பெரிய பள்ளிவாசல் அருகே தேர் வந்தபோது, அங்கிருந்த இஸ்லாமியர்கள் பக்தர்களுக்கு குளிர்பானங்களை வழங்கினர். இது பலரையும் வெகுவாக கவர்ந்தது. இதுதொடர்பான வீடியோவை, செய்தியில் இணைக்கப்பட்டுள்ள காணொளியில் பார்க்கலாம்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com