vinayagarpt desk
தமிழ்நாடு
"பட்ட கஷ்டமெல்லாம் நீங்கவேண்டும்" விநாயகரை வணங்கிய இஸ்லாமியர்!
ராமநாதபுரத்தில் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விநாயகர் சிலைக்கு இஸ்லாமிய நபர் ஒருவர் சாம்பிராணி புகை போட்டு தரிசனம் செய்த சுவாரஸ்ய நிகழ்வு நடந்தது.
இன்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு அமைப்பினர் சுமார் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் அமைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.
vinayagarpt desk
இதில் இராமநாதபுரம் வண்டிக்காரத்தெரு பகுதியில் பொதுமக்களால் அமைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைக்கு சாகுல் ஹமீது என்ற இஸ்லாமியர் சாம்பிராணி புகை போட்டு வேண்டுதல் செய்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
இவர் ஏற்கெனவே முருகன் கோவில் திருவிழாவில் அலகு குத்தி வந்த பக்தர்கள் முன்பு சாம்பிராணி புகை போட்டு நடனமாடிய காட்சி வைரலாகிய நிலையில், தற்போது விநாயகர் சிலைக்கு சாம்பிராணி புகை போட்ட சம்பவமும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.