தமிழ்நாடு
"கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கொலை குற்றங்கள் குறைந்துள்ளது" - டிஜிபி சைலேந்திரபாபு
"கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கொலை குற்றங்கள் குறைந்துள்ளது" - டிஜிபி சைலேந்திரபாபு
கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் தமிழகத்தில் குற்றங்கள் குறைந்துள்ளதாக தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் சட்டம் ஒழுங்கு குறித்து டிஜிபி சைலேந்திர பாபு ஆலோசனை நடத்தினார். இதையடுத்து கோவை மாநகர காவல்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள இணையவழி குற்றப்பிரிவு காவல் நிலையத்தை திறந்துவைத்தார்.
புல்வேறு குற்ற வழக்குகளில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு நற்சான்றிதழ் மற்றும் சன்மானத்தை வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்...
முதல்வர் உத்தரவின்படி கோவை மாநகரில் 3 புதிய காவல் நிலையங்கள் அமைப்பதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 15 விழுக்காடு கொலை குற்றங்கள் குறைந்துள்ளதாக தெரிவித்தார்.