\
சி. விஜயபாஸ்கர் - எம்.ஆர். விஜயபாஸ்கர்
சி. விஜயபாஸ்கர் - எம்.ஆர். விஜயபாஸ்கர்Pt web

தவெக | சி. விஜயபாஸ்கருடன் எம்.ஆர். விஜயபாஸ்கரும்.. வெளியானது முக்கிய அறிவிப்பு!!

சி. விஜயபாஸ்கரைத் தொடர்ந்து எம்.ஆர். விஜயபாஸ்கரும் நாளை தவெகவில் இணைவதை உறுதிபடுத்தியிருக்கிறார்.
Published on

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில், அதிமுக 3-வது இடத்திற்கு சென்றதையடுத்து, அதிமுக ஏற்பட்ட உட்கட்சிப்பூசல் காரணமாக எஸ். பி. வேலுமணி, சிவி சண்முகம் உள்ளிட்ட 25 எம்.எல்.ஏ-க்கல் அடங்கிய ஒரு அணியும் கே. பழனிசாமி தலைமையிலான ஒரு அணியும் என 2ஆக பிரிந்தது. அதிமுகவின் கட்டுப்பாட்டையும் மீறி ஆளும் தவெகவுக்கு சட்டப்பேரவையில் ஆதரவளித்திருந்தது பேசுபொருளானது. எனினும், அதிமுக தற்போது சுமூகமான சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. எனினும், அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் இதுவரை 6 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்திருக்கின்றனர். இதன்மூலம் சட்டப்பேரவையில் அதிமுகவின் பலம் 41 ஆக குறைந்திருக்கிறது.

அதிமுக எம்.எல்.ஏ-கள்
அதிமுக எம்.எல்.ஏ-கள்Pt web

அதில், பெருந்துறை எம்.எல்.ஏ ஜெயகுமார், தாராபுரம் எம்.எல்.ஏ சத்யபாமா, மத்ராந்தகம் எம்.எல்.ஏ மரகதம் குமரவேல் ஆகியோர் முதன்முதலாக தங்களது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த கையோடு தவெக இணைந்து அதிர்ச்சி கொடுத்திருந்தனர். தொடர்ந்து, அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரும் அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ-வுமான இசக்கி சுப்பையா தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தார்.

இந்தசூழலில் தான், 5 வதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி. பாஸ்கரும், அடுத்ததாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரும் தங்களது எம்.எல்.ஏ பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தனர். தொடர்ந்து, அவர்கள் தவெகவில் இணைவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டு வந்தது. அதன்படி தான், நாளை தவெகவில் இணைவதை சி. விஜயபாஸ்கர் இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டு உறுதிப்படுத்தினார். இதைத் தொடர்ந்து தற்போது, எம்.ஆர். விஜயபாஸ்கரும் தான் தவெக இணைவதை உறுதிபடுத்தியிருக்கிறார்.

இதன்மூலம், அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களாக இருந்த இரு விஜயபாஸ்கர்களும் தற்போது ஆளும் தவெகவில் இணையவுள்ளனர்.

சி. விஜயபாஸ்கர் - எம்.ஆர். விஜயபாஸ்கர்
எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்.. வெளியேறிய பின்னணி என்ன?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com