கோபி - சுதாகருக்கு எம்.ஆர்.ராதா விருது வழங்க வேண்டும்
கோபி - சுதாகருக்கு எம்.ஆர்.ராதா விருது வழங்க வேண்டும்முகநூல்

‘Society பாவங்கள்’ | ”கோபி - சுதாகருக்கு அரசு பாதுகாப்பு வழங்கணும்” - திராவிடர் விடுதலைக் கழகம்!

கோபி - சுதாகருக்கு தமிழக அரசு பாதுக்காப்பு வழங்க வேண்டும் என்றும், அதேப்போல தமிழக அரசு எம்.ஆர்.ராதா விருது வழங்கி கெளரவிக்க வேண்டும் எனவும் திராவிடர் விடுதலை கழகத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Published on

கோபி - சுதாகருக்கு தமிழக அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் பெரியார் ,அண்ணா விருது போல் சமூக நலன் கொண்டு செயல்படும் கோபி - சுகாதருக்கு தமிழக அரசு எம்.ஆர்.ராதா விருது வழங்கி கெளரவிக்க வேண்டும் என திராவிடர் விடுதலை கழகத்தினர் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் youtube பிரபலங்களான கோபி சுதாகருக்கு ஆதரவாக திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மனு அளிக்கப்பட்டு உள்ளது. நேற்றைய தினம் கோபி சுதாகருக்கு எதிராக மனு வழங்கப்பட்டிருந்த நிலையில் திராவிடர் விடுதலைக் கழகம் கோபி சுதாகருக்கு ஆதரவாக இன்று மனு ஒன்றை அளித்துள்ளனர்.

பரிதாபங்கள் எனும் YouTube சேனல் நடத்தும் கோபி - சுதாகர் என்பவர்கள் சமூகத்தில் நடக்கும் ஆணாவப்படுகொலை தொடர்பாக Society parithapangal எனும் விடியோ வெளியிட்டனர். இதற்கு பல்வேறு தரப்பினர் மத்தியில் ஆதரவும் சில அமைப்புகள் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், குறிப்பாக சவுத்ரி தேவர் என்பவர் கோபி சுதாகருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும் மிரட்டல் எடுக்கும் தொனியிலும் பேசி வீடியோ சொல்லிட்டு இருந்தார். இந்த நிலையில் அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி திராவிடர் விடுதலை கழகம் சார்பில் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

கோபி - சுதாகருக்கு எம்.ஆர்.ராதா விருது வழங்க வேண்டும்
”11ம்வகுப்பு பொதுத்தேர்வு ரத்து” மாநில கல்விக் கொள்கையை வெளிட்டார் முதல்வர்! முக்கிய அம்சங்கள் என்ன?

கோபி - சுதாகருக்கு தமிழக அரசு பாதுக்காப்பு வழங்க வேண்டும். என்றும், அதேபோல் பெரியார் ,அண்ணா விருது போல் சமூக நலன் கொண்டு செயல்படும் கோபி - சுகாதருக்கு தமிழக அரசு எம்.ஆர்.ராதா விருது வழங்கி கெளரவிக்க வேண்டும் என திராவிடர் விடுதலை கழகத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com